வீட்டுக்கடனை விரைந்து கட்டிமுடிக்க என்ன செய்யலாம்?

இன்றைய நிலையில் சொந்த வீடு வாங்கும் பலரும் வங்கியில் கடன் பெற்றுத்தான் வாங்குகிறார்கள். இது நீண்ட காலக் கடன் என்பதால், இதை விரைவில் அடைத்து, கடன் சுமை எதுவும் இல்லாமல், சுதந்திரமாக இருக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதற்கான வழிகள் என்னென்ன என்று பார்ப்போம்.
ஸ்டெப் அப் முறையில் வீட்டுக் கடன்...
வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையை எவ்வளவு கட்ட வேண்டுமோ அதைவிட அதிகமான தொகையைக் கட்டி வந்தால், வீட்டுக் கடன் விரைவிலேயே அடைபட்டுவிடும். இதனால், வட்டி கணிசமாக மிச்சமாகும். இது எப்படி சாத்தியம் என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.
ஒருவர் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கு கிறார் எனவும், இதை 25 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிறார் எனவும் வைத்துக்கொள் வோம். கடனுக்கான ஆண்டு வட்டி 9% எனில், அவர் கட்டும் மாதத் தவணை ரூ.41,960 ஆகும். இந்தத் தொகையை அவர் 25 ஆண்டுகளுக்கும் கட்டி வந்தால், மொத்தம் கட்டும் வட்டி ரூ.75,87,945 ஆகும், அதாவது, அசலுடன் சேர்த்து அவர் மொத்தம் ரூ.1,25,87,945 கட்டி இருப்பார்.
இதுவே அவர் ஆண்டுதோறும் ஒரு தவணையை (ரூ.41,960) மட்டும் அதிகரித்து கட்டி வந்தால், கடன் 25 ஆண்டுகளுக்கு பதில், 19 ஆண்டு 3 மாதங்களில் கடன் முடிந்துவிடும். கடனுக்கான காலம் சுமார் நாலரை ஆண்டுகள் முன்கூட்டியே அடைபடுவது நடுத்த வர்க்கத்தினருக்கு மிகவும் நிம்மதி தரும் விஷயம் அல்லவா?
இ.எம்.ஐ தொகையை 5% அதிகரித்தால்...
இதுவே வீட்டுக் கடன் தவணைத் தொகையை ஆண்டுதோறும் 5% அதிகரித்து கட்டி வருவதாக வைத்துக்கொள்வோம். இங்கே முதல் ஆண்டில் கட்டும் மாதத் தவணை ரூ.41,960 ஆகும். இந்தத் தவணையை 5% அதிகரித்தால், இரண்டாம் ஆண்டில் ரூ.44,058 கட்ட வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் இப்படியே 5% அதிகரித்து வீட்டுக் கடனைக் கட்டி வந்தால், 25 ஆண்டு களுக்கான கடன், 13 ஆண்டுகள் 3 மாதத்தில் அடைபட்டுவிடும். இதுவே, கடன் தவணையை ஆண்டுக்கு 10% அதிகரித்து வந்தால், 10 ஆண்டுகள் 2 மாதங்களில் கடன் முடிவடைந்துவிடும்.
மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு...
ஒருவர் ரூ.50 லட்சத்தை வீட்டுக்கடன் மூலம் பெற்று வீடு வாங்குகிறார். இதற்கான வட்டி 8.25%. 25 ஆண்டு காலத்தில் அவர் இந்தக் கடனை அடைக்க வேண்டுமெனில், மாதந்தோறும் கட்டும் தவணை ரூ.39,422-ஆக இருக்கும்.
இந்தத் தவணையைக் கட்டிவரும் அதே நேரத்தில், இந்த இ.எம்.ஐ தொகையைல் 10% பணத்தை அதாவது, ரூ.3,942-யை எஸ்.ஐ.பி முறையில் ஒரு லார்ஜ் கேப் ஃபண்டில் முதலீடு செய்து, அதற்கு 11% ஆண்டுக் கூட்டு வட்டியில் லாபம் கிடைத்தால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் 52,14,299-ஆக இருக்கும். இதில் முதலீடு செய்த பணம் ரூ.11,82,675-ஆகும். இதைக் கழித்துவிட்டால், உங்களிடம் ரூ.40,91,624 இருக்கும். இதற்கு வரியாக ரூ.4 லட்சத்தைக் கழித்தால்கூட உங்களிடம் ரூ.36 லட்சம் இருக்கும். இந்தப் பணத்தைக் கொண்டு, வீட்டுக்கடனைக் கட்டி விரைவிலேயே கடன் சுமையில் இருந்து மீளலாம்!
மியூச்சுவல் முதலீடு பெஸ்ட்...
ஆக, வீட்டுக் கடன் சுமையைக் குறைக்க கடன் வாங்கிய காலம் முதலே இ.எம்.ஐ தொகையைப் போல 10% பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது நல்லது.
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.