கடந்த நூறு ஆண்டுகளாக பத்திரிகைகள் மற்றும் இணையத்தின் வாயிலாக நாட்டு நடப்புகளை உள்ளதை உள்ளபடியாக எடுத்துச் சொல்லி, மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற விகடன் குழுமத்தின் ஓர் அங்கம்தான் 'லாபம்'. நிதி சார்ந்த விஷயங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்காகவே 'லாபம்' தொடங்கப்பட்டு உள்ளது. சொத்து உருவாக்கம் என்பது வெறும் எண்களால் உருவாக்கப்படும் விளையாட்டல்ல. சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கத் தேவையான வழிகளை முதலீட்டாளர்களுக்குக் காட்டுவது, அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, இவற்றின் மூலம் மக்களின் மனதில் நீங்க இடம்பிடிப்பதுதான் லாபத்தின் நோக்கம் ஆகும்.
'லாபம்' உருவாவதற்கு முக்கியமான கேள்வி இதுதான்: சொத்து உருவாக்கம் என்பது நம் மக்கள் தொகையில் 1% பேருக்கு மட்டும் உரிமையானதா? அல்ல. சொத்து உருவாக்கம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்பது 'லாபம்' உறுதியாக நம்புகிறது. உங்கள் சொத்து பல மடங்காகப் பெருகுவதற்கான வழிகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. இதன் மூலம் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை உங்களுக்கு உழைக்க வைக்க முடியும். இதன் மூலம் நீண்ட காலத்தில் உங்கள் பணத்தைப் பல மடங்காகப் பெருக்கி, நிதிச் சுதந்திரம் கொண்டதொரு வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.
எங்கள் நோக்கமே, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இந்திய மக்களுக்கு அவர்களின் செல்வத்தைப் பெருக்குவதற்கான நம்பமான வழிகளை நிபுணர்களைக் கொண்டு வழிகாட்டி, அதை மக்களுக்குப் புரியும்படி பிராந்திய மொழியில் சொல்வதாகும். அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, புதுமையான யுக்திகள் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கேற்ற திட்டங்களை எடுத்துச் சொல்வதுதான் லாபத்தின் முக்கியமான நோக்கம் ஆகும்!