முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு முன்பைவிட அதிகரித்திருந்தாலும், எந்த வகையான ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்ற குழப்பம் தொடர்ந்து இருந்து வருகிறது.

முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு முன்பைவிட அதிகரித்திருந்தாலும், எந்த வகையான ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்ற குழப்பம் தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக ஆக்டிவ் மியூசுச்வல் ஃபண்டில் (Active Mutual Fund) முதலீடு செய்யலாமா, குறைந்த செலவு விகிதம் கொண்ட பாஸிவ் மியூச்சுவல் ஃபண்டில் (Passive Mutual Fund) முதலீடு செய்வதா, எது லாபகரமானது, எது நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது என்ற குழப்பம் இருந்து வருகிறது.
எது லாபகரமானது?
ஒரு சில பாஸிவ் ஃபண்டுகள் சிறப்பான வருமானம் கொடுத்தாலும் பெரும்பாலான ஆக்டிவ் ஃபண்டுகள் நல்ல வருமானத்தை கொடுத்து வருகின்றன. சிறப்பான ஆக்டிவ் ஃபண்டுகளைத் தேர்வு செய்யும்போது, குறைந்தபட்சம் பாஸிவ் ஃபண்டுகளை காட்டிலும் 3% வருமானம் அதிகம் கிடைக்கிறது.
கடந்த காலத்தில் கிடைத்த புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது, பாசிவ் ஃபண்டுகள் தந்த வருமானத்தைவிட ஆக்டிவ் ஃபண்டுகள் தந்த வருமானம் சற்று அதிகம். இதை வைத்துப் பார்க்கும்போது, ஆக்டிவ் ஃபண்டுகள்தான் முதலீட்டுக்கு பெஸ்டா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
ஆக்டிவ் ஃபண்டுகளைப் பொறுத்தவரையில் பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருந்து வரும் காலகட்டத்தில் சிறந்த வருமானத்தைக் கொடுக்கும். ஏறுமுகப் பங்குச் சந்தையில் எந்தப் பங்குகளை வாங்கினாலும் அது லாபகரமான ஒன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிறப்பாக செயல்படாத ஃபண்டுகள், லாபகரமற்ற ஃபண்டுகள், சராசரியான வருமானம் கொடுக்கக்கூடிய ஃபண்டுகள், அதிக மதிப்புடைய ஃபண்டுகள் எனப் பலவும் சிறப்பான லாபம் கொடுக்கலாம்.
கடந்த 5 வருட காலகட்டத்தில் ஆக்டிவ் ஃபண்டுகள் தந்த 5 வருட சராசரி வருமானம் 16.98% ஆகும். இதே காலகட்டத்தில் இண்டெக்ஸ் ஃபண்டுகள் தந்த சராசரி வருமானம் 16.65% ஆகும். இந்த இரு வகை ஃபண்டுகளுக்கு இடையிலான வருமான வித்தியாசம் வெறும் 0.4% மட்டுமே. இது பெரியளவிலான வித்தியாசமில்லை. ஆனா, டாப் ஆக்டிவ் ஃபண்டுகளின் வருமானம், பாஸிவ் ஃபண்டுகளைவிட அதிகமாக உள்ளன.
எதில் லாபம்?
தொடர்ந்து சந்தையில் ஏற்றம் இருக்கும்போது இண்டெக்ஸ் ஃபண்டுகள் சிறப்பான வருமானம் கொடுக்கலாம். ஆனால், சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருக்கும் எனில், ஆக்டிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் மட்டுமே அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எந்த சமயத்தில் எந்த வகை அதாவது, ஆக்டிவ் ஃபண்டா அல்லது பாசிட்வ் ஃபண்டா என்பதை உங்களால் முடிவு செய்ய முடியவில்லை எனில், ஒரு தேர்ந்த நிதி ஆலோசகரின் ஆலோசனைப்படி நடப்பது அதிக லாபம் பெற நிச்சயம் உதவும்!
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.