அதிகமான மக்கள் முதலீடு செய்த ஃபண்ட் திட்டங்கள் எவை தெரியுமா?

2024-ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகளிடம் நிர்வாகத்தில் உள்ள சொத்துகளின் மதிப்பு இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. இதற்கு பங்குச் சந்தையின் வளர்ச்சி, மியூச்சுவல் ஃபண்டுகளிடம் கொட்டும் முதலீடுகள் ஆகிய இரண்டுமே முக்கியமான காரணங்கள் ஆகும்.

இந்த இரண்டு காலாண்டுகளில் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் உள்ள சொத்துகள் மிக அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய 10 மியூச்சுவல் ஃபண்டுகளை எடுத்துக்கொண்டால், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ள சொத்துகளின் மதிப்பு (AUM - Asset Under Management) 28% வளர்ந்துள்ளது. ஜூன் காலாண்டின் இறுதியில், நிப்பான் இந்தியா நிறுவனத்தின் சராசரி ஏ.யூ.எம் 4.8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இரண்டாம் இடத்தில், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் நிர்வாகத்தில் உள்ள சொத்து மதிப்பு 22% வளர்ந்துள்ளது. இதன் சராசரி ஏ.யூ.எம் 6.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

மூன்றாம் இடத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ புருடன்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் நிர்வாகத்தில் உள்ள சொத்துகளின் மதிப்பு 22% வளர்ந்துள்ளது. சராசரி ஏ.யு.எம் 7.5 லட்சம் கோடி ரூபாய்.

நான்காம் இடத்தில் கோட்டக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ள சொத்து மதிப்பு 19% வளர்ந்துள்ளது. சராசரி ஏ.யு.எம் 4.2 லட்சம் கோடி ரூபாய்.

ஐந்தாம் இடத்தில் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ள சொத்துகள் 19% வளர்ந்துள்ளன. சராசரி ஏ.யு.எம் 1.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

ஒரு ஃபண்ட் திட்டத்தில் அதிகமான மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள் என்பதற்காக நீங்களும் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. எந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம், அந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு உங்களுக்கு ஏற்றதா என்பதை எல்லாம் நன்கு பரிசீலித்து முதலீடு செய்வது சிறந்த முதலீட்டு முடிவை எடுக்க நிச்சயம் உதவும்!

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.