ரூ.33 லட்சம் ரூ.8.30 கோடியாக மாறிய அதிசயம்...! கைகொடுத்து உதவிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்!

சாதாரண மக்களும் பணம் சேர்த்து செல்வத்தைப் பெருக்குவதற்கு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு நல்ல வழியாக இருக்கிறது. குறிப்பாக, நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகள் செல்வத்தை வளர்க்க உதவுகின்றன.
இப்படி பணத்தை பல மடங்கு பெருக்கித் தந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிறைய உதாரணங்களும் இருக்கின்றன. அப்படி ஒரு ஃபண்டை இப்போது பார்க்கலாம். ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் லார்ஜ்கேப் ஃபண்ட்தான் ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் (HDFC Top 100 Fund), 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஃபண்ட் சமீபத்தில் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இந்த ஃபண்ட் திட்டமானது 19% சி.ஏ.ஜி.ஆர் வருமானத்தைக் கொடுத்து அசத்தியிருக்கிறது. உதாரணமாக, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்டில் மாதம்தோறும் 10,000 ரூபாய் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வந்திருந்தால், உங்களுடைய மொத்த முதலீடு 33.2 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், கடந்த மே மாத இறுதி நிலவரப்படி, இந்த ஃபண்டில் உங்களுடைய முதலீடு 8.30 கோடி ரூபாயாக வளர்ந்து பெருகியிருக்கும்.
இதுதான் நீண்டகால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகள் செய்யும் மேஜிக். முதலீட்டாளர்கள் அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப உரிய முதலீட்டு ஆலோசனையுடன் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் அடிப்படையில் ஒரு லார்ஜ்கேப் ஃபண்ட். இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் சுமார் 80% பிரபல லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளே இருக்கின்றன. மேலும், நிறுவனங்களின் அடிப்படைகளை மட்டும் மையமாகக் கொண்டு பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்கிறது.
இந்த ஃபண்டில் மாதம்தோறும் ரூ.10,000-த்துக்குப் பதிலாக ரூ.5,000 மட்டுமே மாதம்தோறும் முதலீடு செய்திருந்தால், இப்போது ரூ.4 கோடியாக வளர்ந்திருக்கும். மாதம்தோறும் ரூ.2,500 முதலீடு செய்திருந்தாலே ரூ.2 கோடி கிடைத்திருக்கும்!
நீண்ட கால நோக்கில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் பணவீக்கத்தைவிட அதிக வருமானம் பார்க்க முடியும்!
அதே சமயம், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது கடந்த காலத்தில் கிடைத்த அதே அளவு வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்!
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.