ரூ.1 கோடி சேர்க்க ஆசையா?

இந்த 6 விஷயங்களைப் பின்பற்றுங்க…

நம் வாழ்க்கையில் ஒரு கோடி ரூபாயாவது சேர்க்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை...? ஆனால், நம் வாழ்வில் ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது என்பது சாத்தியமான விஷயமே! நம் வாழ்வில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க வேண்டும் எனில், பின்வரும் 6 விஷயங்களை அவசியம் கவனித்து செய்ய வேண்டும்.

படி 1: முதலில் சேமிக்க வேண்டும்; பிறகு செலவு செய்ய வேண்டும்…

நம்மில் பலர் 50,000 சேர்க்கிறோம் எனில், அதில் 48,000 செலவு செய்கிறோம். மீதமுள்ள பணத்தைத்தான் சேமிக்கிறோம். இதற்குப் பதில், வருமானத்தில் சேமிப்பு போக மீதமுள்ள பணத்தைச் செலவு செய்ய வேண்டும்.

உதாரணமாக, 50,000 வருமானத்தில் 10 ஆயிரம் ரூபாயை நம்மால் முதலீடு செய்ய முடியும் எனில், அது போக மீதமுள்ள தொகையை மட்டுமே செலவு செய்ய வேண்டும். இப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளீர்கள் என்றால், 80% வீட்டுச் செலவுகள் என்றும், 10% நீண்ட கால சேமிப்புக்கும், 10% குறுகிய கால சேமிப்புக்கும் ஒதுக்கிவிடலாம். ஆனால், எவ்வளவு பணத்தை சேமிக்க/முதலீடு செய்யப் போகிறோம் என்பதை முதலில் முடிவு செய்துவிடுவது அவசியம். நீங்கள் கோடீஸ்வரர் ஆவது நீங்கள் சம்பாதிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தல்ல. நீங்கள் எவ்வளவு சேமித்து, முதலீடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே அமையும்.

படி 2: அவசர செலவுகளை சமாளிக்கத் தயாராக இருங்கள்…

கோவிட் பெருந்தொற்று வந்து, வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு போன்ற நிறைய எதிர்பாராத சிக்கல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற எதிர்பாராத சிக்கல்கள் வரும்போது, அதைச் சமாளிக்கப் பலரும் கடன் வாங்கும் நிலையில்தான் இருக்கிறோம். எனவேதான், குறைந்தபட்சம் ஆறு மாதத்துக்கான செலவுத் தொகையை ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில், எமெர்ஜென்சி ஃபண்டாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். இது ஒவ்வொரு தனிநபர் நிதிநிலைக்கும் அவசியமாகும்.

நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறீர் கள் என்றால், அந்தக் கம்பெனி ஒரு மருத்துவக் காப்பீடு அதிக கவரேஜ் தொகைக்குக் கொடுக்கிறது என்றால், நீங்கள் தனியாகப் பாலிசி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் பிரச்னை என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். விபத்துகள் நடக்கலாம். இதுபோல நடக்கும்போது 75% பேர் கையில் இருந்துதான் பணத்தைச் செலவு செய்கிறார்கள். அதிலும் பலர் கடன் வாங்கிதான் செலவு செய்கிறார்கள். இதைத் தவிர்க்க மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகும்.

ஒருவர் குடும்பத்தை வழி நடத்துபவராக இருந்தால், வாழும்போது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவார். துரதிர்ஷ்டவசமாக வருமானம் ஈட்டும் நபர் இல்லாமல் போகும் சூழ்நிலை வருகிறது எனில், குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தேவைகள் என்ன ஆகும்? எப்படி சமாளிப்பார்கள். அதற்கு, குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் வழங்கும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தால், குடும்பத்தினரின் நிதித் தேவைகள் சிக்கல் இல்லாமல் பூர்த்தியாகும்.

படி 4: தெளிவான செலவுத் திட்டம் தேவை…

நம்முடைய 50% பிரச்னைகள் எப்படித் தீரும் என்றால், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டால் போதும். நீண்ட காலத்தில் (Long term) என்ன வேண்டும், குறுகிய காலத்தில் (Short term) என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

குறுகிய கால முதலீடு என்பது மூன்று வருடங்களுக்குள்ளானது. இதில் மொபைல் போன், கார், சுற்றுலா போன்றவை அடங்கும். இதற்கு வருடத்தின் செலவுகளில் 5%, 7% 10% என ஒரு தொகையைத் தீர்மானித்துவிட்டால், முடிவு எடுப்பது மிகவும் எளிதாகிவிடும்.

அதேபோல, நீண்ட காலத் திட்டங்கள், ஓய்வுக்காலத் திட்டங்களில் நம் இலக்கு என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டும். நான் ஓய்வு பெறும்போது சொந்த வீட்டில்தான் இருப்பேன். நான் 2040-ல் ஓய்வு பெறுவேன். அப்போது முதலீடுகள் மூலம் மாதம் 2 லட்சம் ரூபாய் வருமானம் வரும். இப்படி ஒரு தெளிவான திட்டம் இருந்தால், இன்றைக்கு நீங்கள் எவ்வளவு தொகை முதலீட்டுக்காக ஒதுக்க வேண்டும் என்பது தெளிவாகிவிடும்.

எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் இன்ஜினீயரிங் படிப்பதற்கு நானே அவனுக்குச் செலவு செய்வேன். ஆனால், அவன் வெளி நாட்டில் படிக்க முடிவெடுத்தால், அதற்கு என்னால் செலவு செய்ய முடியாது. ஸ்காலர்ஷிப் அல்லது கல்விக் கடன் வாங்கி தான் படிக்க வைப்பேன். இந்த மாதிரி முடிவைத் தெளிவாக எடுத்து, மகனிடமும் சொல்லிவிடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் பல நேரங்களில் பணச் சிக்கலில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம். ஆகையால், நீண்ட கால திட்டமிடலில், எனக்கு வேண்டியது என்ன, எதை என்னால் செய்ய முடியும், எது எனக்குக் கூடுதல் செலவு என்பதைத் தெளிவாக முடிவு செய்துவிட்டால் மிகவும் நல்லது.

படி 5: எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவு…

செல்வம் சேர்க்க முதலீடு செய்ய வேண்டும் தான். ஆனால், அதிக வருமானம் ஈட்ட எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதிலும் தெளிவு தேவை. தினசரி பங்கு வர்த்தகம், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன், கிரிப்டோகரன்சி வர்த்தகம் போன்றவற்றில் பலரும் பணத்தை அதிகமாக இழக்கிறார்கள். எனவே, இவற்றை எல்லாம் நாடாமல் இருப்பது மிகவும் நல்லது.

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.