ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.4 கோடியாக மாறிய அதிசயம்... சூப்பர் லாபம் ஃபண்ட் திட்டம்!

நிலையான முதலீடும், பொறுமையும் இருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கோடீஸ்வரராகலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், இந்தியா குரோத் ஃபண்டின் (Nippon India Growth Fund) ஆகும்.

இந்த ஃபண்ட் திட்டத்தின் என்.ஏ.வி.யானது (Net Asset Value) முதல்முறையாக 4,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் இதற்குமுன் எந்தவொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் என்.ஏ.வியும் 4,000 ரூபாயைத் தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும்.

நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட் 1995-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. அப்போது இந்த ஃபண்டின் என்.ஏ.வி 10 ரூபாயாக இருந்தது. கடந்த ஜூலை 16-ம் தேதி இந்த ஃபண்டின் என்.ஏ.வி 4,000 ரூபாயைத் தாண்டிவிட்டது.

இந்த ஃபண்ட் திட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள்கூட நிறைவடையாத நிலையில், கிட்டத்தட்ட 400 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது ஆச்சரியமான விஷயம் ஆகும்.

2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நிப்பான் இந்தியா குரோத் ஃபண்டின் என்.ஏ.வி 3,000 ரூபாயை தாண்டியது. ஓராண்டுக்குள் இந்த ஃபண்ட் திட்டத்தின் என்.ஏ.வி. 4,000 ரூபாயைத் தாண்டியிருப்பது மியூச்சுவல் ஃபண்ட் மேஜிக் என்றே சொல்லலாம்.

பங்குச் சந்தையின் ஏற்றம் குறிப்பாக, மிட்கேப் பங்குகளின் வளர்ச்சியும் இந்த ஃபண்டின் என்.ஏ.வி ஏற்றத்துக்கு முக்கியமான காரணம் ஆகும்.

நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட் தொடங்கப்பட்டது முதல் சுமார் 23.14 சதவிகித வருமானம் கொடுத்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்த ஃபண்டில் நிர்வாகத்தில் இருந்த சொத்துகளின் மதிப்பு 30,838.93 கோடி ரூபாய்.

இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டபோதே முதலீடு செய்தவர்கள், அந்த முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருக்கும்பட்சத்தில் அவர்கள் இப்போது கோடீஸ்வரர்களாகி இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தத் திட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். உதாரணமாக, 1995-ம் ஆண்டில் நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட் தொடங்கப்பட்டபோதே அதில் 10,000 ரூபாய் மாதம் தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருந்தால், இப்போது அந்த முதலீடு 25.58 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கும். 10,000 அதிகம் என்கிறவர்கள் மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்திருந்தாலே, ரூ.2.55 கோடி கிடைத்திருக்கும்.

கடந்த காலத்தில் இந்த ஃபண்ட் திட்டம் மிக சிறப்பான வருமானத்தைத் தந்துள்ளது என்பதற்காக இதே ஃபண்டில் இனி முதலீடு செய்யலாமா என்கிற கேள்விக்கான பதில், நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே. காரணம், மியூச்சுவல் ஃபண்டில் கடந்த காலத்தில் கிடைத்த அதே அளவு வருமானம் எதிர்காலத்திலும் கிடைகும் என்று சொல்ல முடியாது! எனவே, கடந்த காலத்தில் கிடைத்த வருமானத்தை மட்டுமே மனதில் கொள்ளலாமல், ஒரு ஃபண்ட் திட்டம் எதிர்காலத்திலும் எப்படிப்பட்ட வருமானம் தர வாய்ப்புள்ளது என்பதை அறிந்து முதலீட்டு முடிவை எடுப்பது நல்லது.

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.