ஒரே ஆண்டில் 53%.. செல்வத்தை பெருக்கும் இண்டெக்ஸ் ஃபண்டுகள்!

இந்தியப் பங்குச் சந்தையின் சிறப்பான வளர்ச்சியால் மியூச்சுவல் ஃபண்டுகளும் நல்ல வருமானம் கொடுத்திருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். சொல்லப்போனால், ஆக்டிவ் ஃபண்டுகளை விட இண்டெக்ஸ் ஃபண்டுகள் சற்று ரிஸ்க் குறைவானவை.
ஆனால், பல்வேறு இண்டெக்ஸ் ஃபண்டுகளே அட்டகாசமான வருமானத்தை கொடுத்திருக்கின்றன. அவ்வகையில், ஒரு ஆண்டில் அட்டகாசமான வருமானத்தை கொடுத்திருக்கும் இண்டெக்ஸ் ஃபண்டுகளின் பட்டியலை பார்க்கலாம். இந்த இண்டெக்ஸ் ஃபண்டுகள் அதிகபட்சமாக 53% வரை வருமானம் கொடுத்துள்ளன.
மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி ஸ்மால்கேப் 250 இண்டெக்ஸ் ஃபண்ட்:
Motilal Oswal Nifty Smallcap 250 Index Fund கடந்த ஓராண்டில் 53.33% வருமானம் கொடுத்திருக்கிறது. 3 ஆண்டுகளில் 30.69% வருமானம் கொடுத்திருக்கிறது.
நிப்பான் இந்தியா நிஃப்டி ஸ்மால்கேப் 250 இண்டெக்ஸ் ஃபண்ட்:
Nippon India Nifty Smallcap 250 Index Fund கடந்த ஓராண்டில் 53.06% வருமானம் கொடுத்திருக்கிறது. 3 ஆண்டுகளில் 30.68% வருமானம் கொடுத்திருக்கிறது.
மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட்:
Motilal Oswal Nifty Midcap 150 Index Fund கடந்த ஓராண்டில் 47.02% வருமானம் கொடுத்திருக்கிறது. 3 ஆண்டுகளில் 37.65% வருமானம் கொடுத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய சந்தையில் ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகள் அசுரத்தனமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதனால், ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பிரிவைச் சேர்ந்த இண்டெக்ஸ் ஃபண்டுகளும் சிறப்பான வருமானம் கொடுத்திருக்கின்றன.
மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து இதுவரை நல்ல வருமானம் கொடுத்துவிட்டன. ஆனால், இனி வரும் நாட்களிலும் அதே போல வருமானம் கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, முதலீட்டாளர்கள் அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப, முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.