ரியல் எஸ்டேட் முதலீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: எது பெஸ்ட்...?

நம்மில் பலர் வாடகை வருமானத்துக்காக குறிப்பாக பணி ஓய்வுக் கால செலவுக்காக வீடுகளை வாங்கி வாடகைக்குவிடுகிறோம். இந்த வாடகை வருமானம் என்பது சொத்தின் மதிப்பில் அதிகப்பட்சம் 2.5 சதவிகித அளவுக்குத்தான் இருக்கிறது. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு ரூ.1 கோடி என வைத்துக் கொண்டால், அதில் 2.5% ஆண்டு வாடகை வருமானமாக இருக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.2,50,000 வாடகை வருமானம் வரும். இது மாதத்துக்கு ரூ.20,835-ஆக இருக்கும். இது போக சொத்தின் மதிப்பு ஆண்டுக்குச் சராசரியாக சுமார் 3 சதவிகிதம் அதிகரித்தால் சொத்தின் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 5.5% வருமானம் கிடைக்கக்கூடும். அதாவது, ரூ.1 கோடிக்கு ஆண்டுக்கு ரூ.5.5 லட்சம்; மாதத்திற்கு சுமார் ரூ.45,835 கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு!

இதுவே ரூ.1 கோடியை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். முதலீட்டாளர்களிடமிருந்து திட்டப்படும் பணம், நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யப்படும் ஹைபிரீட் ஃபண்டுகளில் முதலீட்டின் ஒரு பகுதி முதலீடு செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம்.

குறிப்பாக, சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப பங்குகள், கடன் பத்திரங்களில் கூட்டி குறைத்து முதலீடு செய்யும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் ஒரு பகுதிப் பணத்தைக்கூட முதலீடு செய்யலாம்.

அடுத்து, நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம்/ வெள்ளியில் கலந்து முதலீடு செய்யும் மல்ட்டி அசெட் ஃபண்ட் திட்டங்களில் ஒரு பகுதியை முதலீடு செய்யலாம். மேலும், ஒரு பகுதி பணத்தை கடன் ஃபண்டுகளில் கூட முதலீடு செய்யலாம்.

இப்படி ஹைபிரீட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மூலம் முதலீட்டின் ரிஸ்க் குறைக்கப்படும். இந்த முதலீட்டுக் கலவையின் மூலம் ஆண்டுக்கு சுமார் 8 சதவிகித வருமானம் கிடைக்கும் என வைத்துக் கொள்வோம். அதாவது ஆண்டுக்கு சுமார் ரூ.8 லட்சம் கிடைக்கும்; மாதத்துக்குத் தோராயமாக ரூ.66,665 கிடைக்கும். இந்தத் தொகையை முழுமையாக நாம் எடுத்து செலவு செய்யாமல் வீட்டு வாடகை வருமான அளவுக்கு சுமார் ரூ.20,000 அல்லது தேவைக்குச் செலவு செய்து வரலாம். அப்படி செய்யும் போது, தொகுப்பு நிதியானது தொடர்ந்து ஆயுள் முழுக்க செலவுக்கு வருவதோடு, பல கோடி ரூபாய் மிச்சம் இருக்கும். அது வாரிசுகளுக்குப் பயன்படும்.

சீராகப் பணம் எடுக்கும் முறை!

சொத்தில் முதலீடு செய்வதற்கு பதில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சீரான பணம் எடுக்கும் முறையில் (Systematic Withdrawal Plan - SWP) முதலீடு செய்து வாடகை வருமானம் போல் ஒரு தொகையை பெற முடியும். இப்படி எஸ்.டபிள்யூ.பி முறையில் பணம் எடுப்பது பல வகையில் லாபகரமாக இருக்கும். வீடு வாங்கி வாடகைக்கு விடுவது என்றால் குறைந்தது ரூ.30 லட்சமாவது தேவைப்படும். வீட்டை வாங்க தரகர் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டணம், இதர செலவுகள் எல்லாம் சேர்த்து எப்படியும் சொத்தின் மதிப்பில் 10 - 12% வந்துவிடும். இந்த மதிப்பைவிட சொத்தின் மதிப்பு அதிகரிக்க வேண்டும். அதாவது வாடகை வருமானம், சொத்தின் மதிப்பு அதிகரிப்பு இரண்டும் சேர்ந்து ரூ.10 - 12 லட்சம் வந்தால்தான் லாபத்துக்கே வரும். இதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடும். இது தவிர, வீட்டுக்கு வண்ணம் தீட்டுவது, இதர பராமரிப்புகள், சொத்து வரி, குடிநீர் வரி, கழிவு நீர் வெளியேற்ற கட்டணம், குப்பை வரி என்கிற வகையில் வாடகை வருமானத்தில் சுமார் 10% பராமரிப்பு மற்றும் கட்டணங்களுக்கே போய்விடும். வீட்டு வாடகைக்கு குடியிருப்பிருப்பவர்களால் சிக்கல்கள் வரவும் வாய்ப்புள்ளது. குடித்தனக்காரர்களை மாற்றி அமர்த்துவது பெரிய வேலையாக இருக்கும். வீட்டை விற்பது என்பது அவ்வளவு சுலபமாக நடக்காது. நல்ல விலைக்கு விற்க ஆறு மாதம் தொடங்கி சில ஆண்டுகள் வரைக்கும் காத்திருக்க வேண்டிவரும்.

மியூச்சுவல் ஃபண்டில் அப்படி இல்லை... முத்திரைக் கட்டணம் (Stamp duty) என்பது முதலீட்டுத் தொகையில் 0.005%தான். இது தவிர செலவு என்பது சுமார் 0.1% to 2% (முதலீட்டு திட்டத்தின் அடிப்படையில்) ஆக இருக்கும் அவ்வளவுதான். குறைந்தபட்சம் சில லட்ச ரூபாய்கூட முதலீடு செய்து எஸ்.டபிள்யூ.பி முறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் வங்கிக் கணக்கில் பணம் பெற முடியும்.

மேலும், பணத்தைப் பகுதி பகுதியாக எடுக்க முடியும். இதேபோல் கைவசம் இருக்கும் கூடுதல் தொகையை முதலீடு செய்து நல்ல வருமானம் ஈட்ட முடியும். இதுவே, வீடு என்கிறபோது வேறு வீடு வாங்கி வாடகைக்கு விட்டால்தான் கூடுதல் வருமானம் கிடைக்கும். நீண்ட காலத்தில் வாடகை வருமானம் அதிகரிக்கும் என்றாலும் அந்தக் காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் தொகுப்பு நிதியும் கணிசமாக அதிகரித்திருக்கும்.

வயதான காலத்தில் வீட்டைப் பராமரிப்பது கடினமாக இருக்கும். உடன் யாராவது இருந்தால் சிக்கல் இல்லை. அப்படி இல்லை என்றால் வீட்டில் ஆள்களை வாடகைக்கு வைப்பது, பராமரிப்பு, வரி மற்றும் கட்டணங்கள் செலுத்துவது கடினமாகும்.

SWP பொறுத்தவரையில், நமக்காக உடன் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அல்லது நிதி ஆலோசகர் இருப்பார் என்பதால் முதலீடு தொடர்பான சிக்கல்கள் ஏதும் வர வாய்ப்பில்லை. ஏதேனும் குறைகள் இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அல்லது நிதி ஆலோசகர் உங்களுக்குத் தீர்வு காண்பார்.

தேவையான ஆவணங்கள்!

சொத்து மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் கார்டு, ஆதார் கார்டு, மார்பளவு புகைப்படம், முதலீட்டுத் தொகைக்கான காசோலை ஆகியவை தேவைப்படும். வீடு என்பது அந்தஸ்தின் அடையாளமாக இருக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அப்படி வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாது. இருந்தும் வழக்கமான ஃபிளாட்டை விட இ- ஃபிளாட் பல்வேறு வகையில் லாபகரமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

உங்கள் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்க நீங்கள் தயாராக இருந்தால், மக்கள் குறைந்த விலையிலிருந்து பேரம் பேசத் தொடங்குவார்கள். அதே நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் சொத்தை வாங்கத் தயாராக இருந்தால், மக்கள் அதிக விலையிலிருந்து பேரம் பேசத் தொடங்குவார்கள். எந்தவொரு ரியல் எஸ்டேட் சொத்தும் நியாயமான மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை இது நிரூபிக்கிறது.

எனவே, உங்கள் முதலீட்டு ஆலோசகர் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரை அணுகி உங்கள் வாழ்க்கை இலக்குகளைப் பற்றி விவாதிக்கவும், தேவைப்பட்டால் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் SWP முதலீடுகளைத் திட்டமிடவும்.

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.