மியூச்சுவல் ஃபண்டில் அதிக காலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்குமா?

மியூச்சுவல் ஃபண்ட் அதிக காலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இப்படி அதிக லாபம் கிடைப்பதற்கு காரணமாக இருப்பது கூட்டு வட்டி வளர்ச்சி என்று சொல்லப்படும் பவர் ஆஃப் காம்பவுண்டிங்... ஒரு உதாரணத்தின் மூலம் இதைப் பார்ப்போம்.

பாலகிருஷ்ணனுக்கு கவிதா, ராஜேஷ், அர்ஜுன் என 3 பிள்ளைகள். 3 பிள்ளைகளுக்கும் பிறந்த நாள் அன்று ரூ.50,000 தருவதாகவும், அதை முதலீடு செய்து, 65 வயது வரை வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார். மூவரும் ஒகே என்றனர்.

கவிதா - 20-வது பிறந்த நாள் முதல் 28-வது பிறந்த நாள் வரை முதலீடு செய்துவிட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைத்த பணத்தை இஷ்டம் போல செலவு செய்தார்.

ராஜேஷ் - 20 முதல் 27-வது பிறந்தநாள் வரை கிடைத்த பணத்தை செலவு செய்துவிட்டு, 28-வது பிறந்த நாள் முதல் முதலீடு செய்யத் தொடங்கி, 36-வது பிறந்த நாள் வரை முதலீடு செய்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைத்த பணத்தை இஷ்டம் போல செலவு செய்தார்

அர்ஜுன் - 20 முதல் 27-வது பிறந்தநாள் வரை கிடைத்த பணத்தை செலவு செய்துவிட்டு, 28-வது வயதில் தொடங்கி, 65 வயது வரை தொடர்ந்து முதலீடு செய்தார்.

இப்படி செய்தபின், 65 வயதில் யாருக்கு அதிக பணம் கிடைக்கும், அர்ஜுனுக்கா, ராஜேஷுக்கா, கவிதாவுக்கா?

அர்ஜுன் முதலீடு செய்த தொகை ரூ.19,00,000. அவர் செய்த முதலீட்டுக்குக் கிடைத்த லாபம் 12%. அவருக்குத் திரும்பக் கிடைக்கும் தொகை ரூ.3.05 கோடி.

ராஜேஷ் முதலீடு செய்த தொகை ரூ.4,50,000. அவர் செய்த முதலீட்டுக்குக் கிடைத்த லாபம் 12%. அவருக்குத் திரும்பக் கிடைக்கும் தொகை ரூ.1.98 கோடி.

கவிதா முதலீடு செய்த தொகை ரூ.4,50,000. அவர் செய்த முதலீட்டுக்குக் கிடைத்த லாபம் 12%. அவருக்குத் திரும்பக் கிடைக்கும் தொகை ரூ.4.89 கோடி.

முதலீடு செய்த தொகை குறைவாக இருந்தாலும் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்பதே பவர் ஆஃப் காம்பவுண்டிங்...

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.