மிட்கேப், ஸ்மால்கேப்... எதில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புண்டு?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மீதான ஆர்வம் இளைய தலை முறையினர் மத்தியில் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. எனினும், எந்த வகையான ஃபண்டுகளில் முதலீடு செய்வது, எதில் அதிக வருமானம் கிடைக்கும், எதில் ரிஸ்க் குறைவு எனப் பல கேள்விகள் வருகின்றன. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

எதில் லாபம் அதிகம்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்து வைத்திருப்பது ஸ்மால் & மிட் கேப் ஃபண்டுகளில்தான். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளைப் பார்க்கும்போது, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் கணிசமான வருமானம் கொடுத்துள்ளன. இதனால் பலரும் தங்களது முதலீட்டுக் கலவையில் (Portfolio) மேற்கண்ட பங்குகளில் முதலீடு செய்யும் மிட் மற்றும் லார்ஜ்கேப் ஃபண்டுகளை அதிகம் வாங்கி வைத்துள்ளனர். உதாரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான செயல்பாட்டைக் கொண்ட ஸ்மால்கேப் ஃபண்டின் சராசரி வருமானம் சுமார் 16.5% ஆகும். இதே சிறந்த செயல்பாட்டைக் கொண்ட லார்ஜ்கேப் ஃபண்ட் கொடுத்த வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் 16% ஆகும். சிறந்த செயல்பாட்டைக் கொண்ட லார்ஜ்கேப் ஃபண்டைவிட, மோசமான செயல்பாட்டைக் கொண்ட தாகச் சொல்லப்படும் ஸ்மால்கேப் ஃபண்டே அதிக வருமானம் கொடுத்து உள்ளது. இதனால் பல முதலீட்டாளர் களும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் அதிகம் முதலீடு செய்கின்றனர்.

ஸ்மால்கேப் Vs மிட்கேப்... எதில் அதிக லாபம்?

கடந்த 10 வருடங்களாகச் சிறப்பான வருமானம் கொடுத்தது நல்ல விஷயம் தான். ஆனால், இனிவரும் ஆண்டுகளி லும் இது தொடருமா என்கிற சந்தேகம் இருந்து வருகிறது. தொடர்ந்து ஸ்மால் கேப் ஃபண்டுகளில் வழக்கம்போல முதலீடு செய்யலாமா, முதலீட்டில் கணிசமான பகுதியை ஸ்மால்கேப் ஃபண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யலாமா என்பதைத் தெரிந்துகொள்வதற்குமுன், பங்குச் சந்தையில் டைம் கரெக்‌ஷன் (Time Correction) பிரைஸ் கரெக்‌ஷன் (Price correction) என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

டைம் கரெக்‌ஷன் & பிரைஸ் கரெக்‌ஷன்...

பங்குச் சந்தையில் தொடர்ந்து ஒரு பங்கானது நல்ல லாபம் கொடுத்து வந்த நிலையில், திடீரென சரிவைக் கண்டாலோ, பெரிய லாபம் ஏதும் கொடுக்காமல் இருந்தாலோ அதை டைம் கரெக்‌ஷன் எனக் கூறுவார்கள். ஆக, நல்ல வருமானம் தந்து வந்த பங்கோ, ஒரு துறையோ தொடர்ந்து மேலாக ஏற்றம் கண்டுகொண்டிருக்கும். அவை திடீரென பெரிய ஏற்ற இறக்கம் காணாமல், குறிப்பிட்ட விலைக்குள் (Flat) மட்டுமே வர்த்தகம் ஆகலாம். இதை டைம் கரெக்‌ஷன் எனக் கூறுவார்கள். ஐ.டி.சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மைக்ரோசாஃப்ட் போன்ற மிகப் பெரிய நிறுவனப் பங்குகள்கூட இந்த மாதிரியான டைம் கரெக்‌ஷன்களைக் கண்டுள்ளன.

பிரைஸ் கரெக்‌ஷனைப் பொறுத்தவரை, சில பங்குகள் முக்கியமான சராசரி விலையைத் தாண்டி, அதன் மதிப்பீடு உச்சம் தொடும். அதன் பிறகு, சராசரி விலையை மீண்டும் தொட மெதுவாக சரிவைக் காணும். இது பிரைஸ் கரெக்‌ஷன் எனக் கூறப்படும். மேற்கண்ட டைம் கரெக்‌ஷன் மற்றும் பிரைஸ் கரெக்‌ஷனுக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு. இதை முதலீட்டாளர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 2020 – 21-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஐ.டி துறை சார்ந்த பங்குகள் சிறப்பான ஏற்றம் கண்டன. ஆனால், 2022 – 23-ல் மீண்டும் சரிவைக் காண ஆரம்பித்தன. அந்தச் சமயத்தில் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இது பிரைஸ் கரெக்‌ஷனுக்கு சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்ற கரெக்‌ஷன்கள் பல துறைகளிலும் இருக்கலாம்.

மிட்கேப் & ஸ்மால்கேப் சராசரி வருமானம்...

கடந்த 10 வருடங்களாக ஸ்மால் & மிட் கேப் ஃபண்டுகள் கொடுத்த சராசரி வருமானம் மற்றும் சராசரியான அதன் மதிப்பை முதலீட்டாளர்கள் தெரிந்திருக்க வேண்டும். லார்ஜ்கேப் பங்குகள் மூலம் பொதுவாக 10 ஆண்டுகளில், சராசரியாக சுமார் 12% வருமானம் எதிர்பார்க்கலாம். இதே சிறப்பாகச் செயல்படும் லார்ஜ்கேப் ஃபண்டுகளை எடுத்துக்கொண்டால், ஆண்டுக்குச் சராசரி யாக 14% வருமானம் எதிர்பார்க்கலாம். மிட்கேப் நிறுவனப் பங்கைப் பொறுத்தவரை, சராசரியாக ஆண்டுக்கு 16% வருமானத்தை எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் ஸ்மால் கேப் ஃபண்டுகள் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 18% வருமானத்தை எதிர்பார்க்கலாம். இது நீண்ட கால சராசரி ஆகும்.

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.