ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகள் - எதில் அதிக லாபம் கிடைக்கும்?

நமக்கு மிகவும் நன்கு தெரிந்த முதலீடு என்றால், அது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்தான். ஏறக்குறைய அதே போல செயல்படும் கடன் ஃபண்ட் முதலீடு பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உண்மையில், வங்கி அல்லது அஞ்சலக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கும் கடன் ஃபண்ட் திட்டங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்பதைப் புரிந்துகொண்டால், எதில் அதிக லாபம் கிடைக்கும், எதில் நம் பணத்தை வைத்துக்கொள்ளலாம் என்பது பற்றி முடிவு செய்ய உதவியாக இருக்கும்!
ஃபிக்ஸட் டெபாசிட்... சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை உடனே தொடங்கிவிடலாம். தற்போதைய நிலையில், ஓராண்டுக்கு மேற்பட்ட வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 7% - 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இதில் உள்ள பணத்தை முன்கூட்டியே எடுக்க வேண்டும் எனில், சிறிதளவு அபராதம் கட்ட வேண்டி இருக்கும்.
கடன் ஃபண்ட் திட்டங்கள்... ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மாற்றாக, கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (Debt Mutual Funds) திட்டங்கள் உள்ளன. வங்கிக் கணக்கு வைத்திருந்து கே.ஒய்.சி நிறைவு செய்த யார் வேண்டுமானாலும் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். கடன் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தை சேர்த்து வரலாம். கடன் ஃபண்ட் திட்டங்களில் சேர்த்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்கலாம். இதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது. ஆனால், ஓராண்டுக்குள் திரும்ப எடுத்தால், வெளியேறும் கட்டணம் (Exit Load) செலுத்த வேண்டி இருக்கும்!
நிறைய வரி மிச்சமாகும்... உதாரணமாக, ஒருவர் ரூ. 1 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்திருக்கிறார். அதற்கு 7% வட்டி கிடைத்தால், அவருக்கு ஓராண்டில் ரூ. 7,000 வட்டி கிடைக்கும். அவர் 30% வருமான வரி வரம்பில் வந்தால் ரூ. 2,100 வரி கட்ட வேண்டி வரும். இதுவே அவர் இன்னொரு ரூ. 1 லட்சத்தை லிக்விட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார், அவருக்கு ரூ.10 மதிப்பு கொண்ட ரூ.10,000 யூனிட்டுகள் கிடைக்கிறது. இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7% வருமானம் கிடைத்திருக்கிறது என வைத்துக் கொள்வோம். இவரும் 30% வரி வரம்பில் வந்தால், அவர் மூலதன ஆதாயத்துக்கு மட்டும் 30% வரி கட்ட வேண்டும். யூனிட் மதிப்பு ரூ. 10-லிருந்து ரூ.10.7- ஆக அதிகரித்துள்ள நிலையில் ரூ.7,500 மதிப்புள்ள 701 யூனிட்களை விற்கிறார். இந்த யூனிட்களை வாங்கிய விலை ரூ. 7,010 ஆகும். இங்கே மூலதன ஆதாயம் ரூ. 490 ஆகும். இதற்கு 30% அதாவது ரூ. 147 வரி கட்ட வேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.2,100 வருமான வரிக் கட்டும் நிலையில் கடன் ஃபண்டுகளில் ரூ.147 தான் வரிக் கட்ட வேண்டி வரும். வருமான வரிக்குப் பிந்தைய நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கடன் ஃபண்டுகள் அதிகம் லாபம் தருவதாக உள்ளன.
வரி எவ்வளவு...? தற்போதைய நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும். அதே போல, கடன் ஃபண்ட் லாபத்துக்கும் வருமான வரியைக் கட்ட வேண்டும். அதாவது, வருமான வரி விதிப்பில் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கும் கடன் ஃபண்டுகளுக்கும் வேறுபாடு இல்லை. முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும் அடிப்படை வருமான வரி வரம்புக்கேற்ப (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30% புதிய வரி முறையில் 5%, 10%, 15%, 20% மற்றும் 30%) பிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்டில் வருமான வரியைக் கட்ட வேண்டும். இருந்தாலும், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைவிட கடன் ஃபண்டுகள் லாபகரமாக இருக்கின்றன.
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.