மகன்/மகளின் கல்லூரிப் படிப்புக்கான பணத்தை எளிதாக சேர்க்க உதவும் 5 ஆண்டுத் திட்டம்!

இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்களின் மிகப் பெரிய லட்சியங்களில் ஒன்று, குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதே. ஆனால், அதிகரித்து வரும் செலவினங்களுக்கு மத்தியில், விருப்பத்துக்கு ஏற்ப உயர்கல்வியை வழங்குவது பெரிய சவாலான விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பல ஆண்டுகளாக கல்விச் செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, உயர் கல்விக்கான கட்டணங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன. பலரும் உயர் கல்விக்குப் போதிய பணம் இல்லாத நிலையில், வங்கிகளில் கடன் வாங்கியும், சிலர் தங்களிடம் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்தும், பலர் தாங்கள் ஆசை ஆசையாய் வாங்கிய தங்க நகைகளை விற்பனை செய்தும் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள்.
இதைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்தால், கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது; ஆசையாய் வாங்கிய வற்றை விற்பனை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படாது. எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைகளின் விருப்பப்படி, விரும்பிய படிப்புகளை படிக்க வைக்கவும் முடியும்.
முன்கூட்டியே திட்டமிட வேண்டும்...
பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது தான், கல்வி செலவுகளுக்கான முதலீடுகளையே திட்டமிடுகிறார்கள்.இது தவறான ஒன்று. திருமணம் முடிந்த கையோடு இது போன்ற முதலீடுகளைத் திட்டமிடுவது அவசியம். அப்போது செலவுகள் குறைவாக இருக்கும்.
முதலீட்டுக் காலம் அதிகமாக இருப்பதால், முதலீடு செய்ய வேண்டிய தொகை குறைவாக இருக்கும். நீண்ட காலம் காரணமாக முதலீட்டின் மூலம் வருமானமும் அதிகம் கிடைக்கும். இது கல்விச் செலவுகளை எளிதாக சமாளிக்க உதவும்.
கட்டணம் அதிகரிப்பு...
சில பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்புக்கே 50,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. மேலும், உயர் வகுப்புகள், கல்லூரிப் படிப்புகளுக்கு லட்சத்துக்கும் மேல் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் கல்விக் கட்டணங்களைப் பார்த்துதான், பள்ளிக்கூடத்தையே தேர்வு செய்கிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் பெரும்பாலும் கட்டணங்கள் அதிகமாகவே உள்ளன.
குறைந்த கட்டணங்கள் வசூலிக்கும் பள்ளி களில் ஆங்கிலப் புலமை குறைவாக உள்ளது, கற்றுத்தருவது சரியாக இல்லை. கூடுதல் அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதில்லை என்பதால், இந்தப் பள்ளிக்கூடங்களை பெற்றோர்கள் தவிர்க்கிறார்கள். இவை அனைத்தும் உள்ளதாகக் கூறும் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன.
கட்டணம் அதிகம் இருந்தாலும் குழந்தை களுக்கு சரியான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் பெற்றோர், கடன் வாங்கியாவது அதிக கட்டணம் செலுத்தவும் தயாராகிறார்கள். ஆக, இது மாதிரியான செலவுகளைச் சமாளிக்க பெற்றோர் முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்வது வருவது அவசியம்.
எவ்வளவு முதலீடு..?
நம் முன்னோர்கள் காலத்தில் பிள்ளைகளின் படிப்புக்காக ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற நிரந்தர வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கல்விக் கட்டணத்தைச் செலுத்தினார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அப்படி இல்லை. ஏராளமான முதலீட்டுத் திட்டங்கள் நம்மிடையே உள்ளன. குறிப்பாக, தேவைக்கு ஏற்ப சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களை பெற்றோர்கள் தேர்வு செய்து, முதலீடு செய்து வரலாம்.
குறிப்பாக, கல்விக் கட்டணங்களைத் திட்டமிட குழந்தைகளுக்கு எனத் தனியாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. அவற்றை முதலீட்டுக்குத் தேர்வு செய்து கொள்ளலாம். பல்வேறு துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களான மல்ட்டிகேப் ஃபண்டுகள் மற்றும் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.
ஒருவர் மாதம் 10,000 ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். அவர் 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 6 லட்சம் முதலீடு செய்திருப்பார். அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், ஐந்து ஆண்டு முடிவில் ரூ.8.17 லட்சம் சேர்ந்திருக்கும். இதையே மாதம்தோறும் 15,000 ரூபாய் முதலீடு செய்து அதற்கு 12% வருமானம் கிடைத்தால், 5 ஆண்டுகளில் ரூ.12.25 லட்சம் சேர்ந்திருக்கும். அல்லது, மாதம்தோறும் 20,000 ரூபாய் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் ரூ.16.33 லட்சம் சேர்ந்திருக்கும். அல்லது, மாதம்தோறும் 5,000 ரூபாய் முதலீடு செய்தால்கூட 5 ஆண்டுகள் கழித்து, ரூ.4.08 லட்சம் சேர்ந்திருக்கும்.
இப்படிச் செய்தால் கூடுதல் லாபம்..
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு கள் மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகையை நிலையான வருமானம் தரக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது ஓரளவுக்கு நிலையான வருமானம் எதிர்பார்க்கும் கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணமாக, மாதம்தோறும் 5,000 ரூபாய் முதலீடு மூலம் ரூ.4.08 லட்சம் தொகையை உருவாக்கியவர்கள், அந்தத் தொகையை எஃப்.டி அல்லது கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து, அதற்கு 8% வட்டி / வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், ஆண்டுக்கு சுமார் ரூ.32,630 கிடைக்கும்.
இதே 10,000 ரூபாய் முதலீடு செய்திருப்பவர்களுக்கு, ரூ.8.17 லட்சம் சேர்ந்திருக்கும். அவர்களுக்கு 8% வருமானம் என்பது ஆண்டுக்கு ரூ.65,340 ஆக இருக்கும். இதுவே மாதம்தோறும் 15,000 ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.98,000 வருமானம் கிடைக்கும். இதுவே மாதம்தோறும் 20,000 ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.30 லட்சம் கிடைக்கும். இந்த ஐந்து ஆண்டு முதலீட்டுத் திட்டம் மூலமாக குழந்தைகளின் கல்விக் கட்டணங்களை எளிதாகச் செலுத்த முடியும்.
தவறு இதுதான்...
பெரும்பாலும் அந்தந்த தேவைகளும், செலவுகளும் வரும்போதுதான் பலருக்கும் அதுபற்றிய சிந்தனையே வருகிறது. அந்த வகையில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை பிறந்து 5 – 6 வயது இருக்கும்போதுதான் பிள்ளைகளின் கல்விக்கான முதலீட்டைப் பற்றியே யோசிக்க ஆரம்பிக்கின்றனர். இது மிகப் பெரிய தவறு ஆகும். ஏனெனில், முதலீடு செய்து சில ஆண்டு களுக்குப் பிறகே கணிசமான வருமானம் பார்க்க முடியும். ஆக, குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களின் கல்விச் செலவுக்குத் திட்டமிட்டால், அவர்கள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பிக்கும்போது, சிரமப்படாமல் கலவிக் கட்டணம் செலுத்த உதவிகரமாக இருக்கும்.
இப்படிச் சேர்த்த வருமானம் அனைத்தை யுமே பள்ளிக்கூட கட்டணமாக முழுவமாக செலுத்தப்போவதில்லை. மிச்சம் உள்ள தொகையுடன் அடுத்து வரும் ஆண்டுகளில் சம்பள உயர்வுக்கு ஏற்ப கூடுதல் தொகையை முதலீடு செய்தால், அது எதிர்காலத்தில் கல்லூரிப் படிப்புக்குப் பேருதவியாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு பணம் சேர்க்க நீங்கள் தயாரா..?
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.