அதிக லாபம் வேண்டுமா...? நீண்ட காலத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யுங்கள்!

அதிக லாபம் பெற வேண்டும் என்கிற யாருக்குத்தான் இல்லை. நம் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது. அதிக லாபம் பெற வேண்டும் என்பதற்காக தவறான திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது. எந்த முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும் அதில் உள்ள ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு, அந்த ரிஸ்க் நமக்கு ஏற்றதுதானா என்பதைப் புரிந்துகொண்டுதான் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இன்றைக்கு அதிக லாபம் தர வாய்ப்புள்ள முதலீடுகளில் முன்னணியில் இருக்கிறது மியூச்சுவல் ஃபண்ட். அதனால்தான், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை முன்பைவிட இப்போது அதிகரித்துள்ளது. இதில் சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan - SIP) என்று சொல்லப்படும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எஸ்.ஐ.பி என்றால் என்ன?
எஸ்ஐபி என்பது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அளவு பணத்தை குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்யும் முறையை ஆகும். எஸ்.ஐ.பி முறையை பலரும் விரும்பி தேர்வு செய்வதற்கு முக்கியமான காரணம், அதிக லாபம் கிடைத்து வருவதே. அதாவது, நம் நாட்டின் சராசரிப் பணவீக்க விகிதம் 6%-7% எனில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடு செய்யும்போது நீண்ட காலத்தில் ஆண்டுதோறும் சராசரி 12%-14% வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
எத்தனை ஆண்டுகள்...?
எஸ்.ஐ.பி முறையில் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்கிற கேள்வியை நீங்கள் கேட்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதே நீண்ட காலத்துக்கானதுதான். மியூச்சுவல் ஃபண்டில் குறுகிய காலத்தில் முதலீடு செய்தால், அதன் மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை. மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் எவ்வளவு காலத்துக்கு அதிகமான பணத்தை முதலீடு செய்து வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
8 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால்...?
பங்குச் சந்தை சார்ந்த ஒரு ஃபண்ட் திட்டம் (மல்ட்டிகேப் ஃபண்ட் / ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்) ஒன்றில் மாதம்தோறும் ரூ.5,000 வீதம் 8 ஆண்டுகள் முதலீடு செய்கிறீர்கள். அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், 8 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.4.8 லட்சம் செலுத்தி இருப்பீர்கள். ஆனால், நீங்கள் முதலீடு செய்த பணம் ரூ.7.9 லட்சமாக அதிகரித்திருக்கும். அதாவது ரூ.3.10 லட்சம் உங்களுக்கு லாபமாகக் கிடைக்கும்.
12 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால்...?
8 ஆண்டுகளுக்குப் பதிலாக, ரூ.5000 முதலீட்டை 12 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், நீங்கள் மொத்தம் ரூ.7.2 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் முதலீடு செய்த பணம் ரூ.15.4 லட்சமாக அதிகரித்து இருக்கும். அதாவது. ரூ.8.2 லட்சம் உங்களுக்கு லாபமாகக் கிடைக்கும்.
15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால்...?
அதே முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு நீங்கள் தொடர்ந்தால், நீங்கள் மொத்த ரூ.9 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் முதலீடு செய்த பணம் ரூ.23.8 லட்சமாக அதிகரித்திருக்கும். அதாவது ரூ.14.8 லட்சம் உங்களுக்கு லாபமாகக் கிடைக்கும்.
நீண்ட காலத்தில்தான் அதிக லாபம்...
ஆக, மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால் மட்டுமே அதிக லாபம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரிகிறதா...? மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்கிறீர்கள் என்பதைவிட எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்!
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.