வெளிநாடு வாழ் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்யமுடியுமா?

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (Non-Resident Indians - NRI) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் இணையதளம் மூலம் நேரடியாக முதலீடு செய்ய முடியும். என்.ஆர்.ஐ-க்கள் அவர்களின் என்.ஆர்.இ அல்லது என்.ஆர்.ஓ கணக்குகளின் மூலம் இப்படி முதலீடு செய்ய முடியும். வெளிநாடுகளில் வசிக்கும் பல லட்சம் இந்தியர்கள் இப்போது இந்தியாவில் பங்குச் சந்தை மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவதன் மூலம் நல்ல லாபம் அடைந்து வருகின்றனர்.
இதற்கான வசதியை இந்தியாவில் உள்ள பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் செய்து தருகின்றன. எந்தெந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எந்தெந்த நாடுகளில் இருக்கும் என்.ஆர்.ஐ முதலீட்டாளர்களுக்கு இந்த வசதியைத் தருகின்றன என்பதைத் தெரிந்துகொண்டு, முதலீட்டைத் தொடங்குவது நல்லது.
உதாரணமாக, அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய உதவும் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பட்டியல் இதோ...
1. ஆதித்ய பிர்லா சன்லைப் ஃமியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
2. எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
3. யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
4. ஐ.சி.ஐ.சி.ஐ ஃபுரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
5. டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
6. பாரேக் பரிக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
7. சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
8. நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.